Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் திருட்டு மர்ம நபரை பிடிக்க முடியாமல் திணறல்

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் திருட்டு மர்ம நபரை பிடிக்க முடியாமல் திணறல்

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் திருட்டு மர்ம நபரை பிடிக்க முடியாமல் திணறல்

ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் திருட்டு மர்ம நபரை பிடிக்க முடியாமல் திணறல்

ADDED : ஜூன் 17, 2024 01:41 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில், ஆடிட்டர் வீட்டில் நடந்த, 235 பவுன் நகை திருட்டில் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ., காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். கடந்த, 8 காலை மனைவி சாதானாவுடன் தேனிக்கு சென்றார். 9 காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் ஒருவர், 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றார்.

சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த நபரை தேடி கர்நாடகா மாநிலம், பெங்களூரில் க்ரைம் போலீசார் ஒன்பது பேர் முகாமிட்டுள்ளனர். வீட்டில் பெருமளவில் நகை, பணத்தை உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆடிட்டர் வைத்திருந்ததும் கேள்வி பொருளாக மாறியுள்ளது. ஆடிட்டருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் கசிந்து, மர்ம நபர் கைவரிசையை காட்டி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் மர்ம நபரை முடிவு செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:

வீட்டை பூட்டி விட்டு, ஆடிட்டர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதை முன் கூட்டியே அறிந்து மர்ம நபர், காரில் வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். மொபைல் போன் டவரை அடிப்படையாக கொண்டு, மர்ம நபரை கண்டறிய தீவிரமாக முற்பட்டுள்ளோம். பெங்களூரை சேர்ந்த பழங்குற்றவாளிகள் கைரேகையுடன், மர்ம நபரின் கைரேகையை ஒப்பிட்டுள்ளோம். மர்ம நபர் குறித்து, 400க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராக்களால் ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us