/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,632 கன அடியாக அதிகரிப்புபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,632 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,632 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,632 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,632 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஜூன் 17, 2024 01:42 AM
புளியம்பட்டி,: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 1,632 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலையில், கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணை நீர்மட்டம், 10 அடி வரை உயர்ந்து, 57 அடியை எட்டியது. கடந்த ஒரு வாரமாக, நீர்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது.
இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 641 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,632 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 57.98 அடி, நீர் இருப்பு, 6.6 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் என மொத்தம், 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.