/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : செப் 02, 2025 01:26 AM
ஈரோடு:ஈரோடு அருகே திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தாளாளர் சந்திரசேகர், முதல்வர் லதா, நிர்வாக அதிகாரி சென்னியப்பன் துவக்கி வைத்து படைப்புகளை பார்வையிட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு வானியல் மன்ற உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, கீதா பங்கேற்றனர். மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் சூரிய புள்ளிகளை காண்பித்தனர். விளக்க காட்சிகளைத் திரையில் காண்பித்து சூரிய குடும்பம் குறித்து விளக்கினர். பெற்றோர்களும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
அறிவியல் விஞ்ஞானிகள் மேரி கியூரி, விக்ரம் சாராபாய், சர்.சி.வி.ராமன், ஐன்ஸ்டின் மற்றும் அப்துல் கலாம் போல் வேடமணிந்து வந்த மாணவியர், அறிவியல் கண்காட்சியை சிறப்பித்தனர்.