/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம் ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
ADDED : செப் 02, 2025 01:25 AM
தாராபுரம்;தாராபுரம் வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் நேற்று பூஜை நடந்தது.
கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம், மூலனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1.௪0 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் கொல்லப்பட்டி ஆதி திராவிடர் காலனியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பூஜைகளில் பங்கேற்றனர். இதேபோல் மூலனுார் மூவேந்தர் நகரில் ரேஷன் கடையை திறந்து வைத்தனர். இந்நிகழ்வுகளில் தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.