/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாயக்கற்ற சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்துடன் வசிக்கும் போலீசார் லாயக்கற்ற சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்துடன் வசிக்கும் போலீசார்
லாயக்கற்ற சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்துடன் வசிக்கும் போலீசார்
லாயக்கற்ற சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்துடன் வசிக்கும் போலீசார்
லாயக்கற்ற சான்று வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்துடன் வசிக்கும் போலீசார்
ADDED : ஜூன் 16, 2025 03:19 AM
ஈரோடு: ஈரோடு-பழைய பூந்துறை சாலையில், எஸ்.பி., அலுவலகம் அருகே, 45 ஆண்டுக்கு முன் 36 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. குடியிருப்பில் தற்போது காரைகள், சிமெண்ட் சிலாப் கற்கள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. குடியிருக்க தகுதியற்றது என சான்றும் வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் குடியிருப்பில், ஏழு போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிலாப் கற்கள், காரை தொடர்ந்து பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. தமிழ்நாடு ஹவுசிங் பிரிவு இன்ஜினியர்களும் சில ஆண்டுக்கு முன்னரே ஆய்வு செய்து குடியிருக்க தகுதியற்றது என கூறி விட்டனர். இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் அலுவலகத்தை இடம் மாற்றி சென்றுவிட்டனர். வடக்கு போக்குவரத்து போலீஸ் அலுவலக கூரையில் இரு மாதங்களுக்கு முன் காரை விழுந்து சேதமானது. இதனால் குடியிருப்பை காலி செய்த பல போலீசார், தனியாரிடம் அதிக வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வீடு வழங்கப்படுவது இல்லை. ஆர்.என்.புதுாரில் போலீஸ் குடியிருப்பு இருந்தாலும் தொலைவாக உள்ளது. புதியதாக குடியிருப்பு கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.
ஆபத்தான அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு, புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க, எஸ்.பி., முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.