/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மினி பஸ்கள் இயக்கம் ஈரோட்டில் சிக்கல் மினி பஸ்கள் இயக்கம் ஈரோட்டில் சிக்கல்
மினி பஸ்கள் இயக்கம் ஈரோட்டில் சிக்கல்
மினி பஸ்கள் இயக்கம் ஈரோட்டில் சிக்கல்
மினி பஸ்கள் இயக்கம் ஈரோட்டில் சிக்கல்
ADDED : ஜூன் 16, 2025 03:13 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில், 40க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்கி வருகின்றன. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை போக்குவரத்து துறை மூலம் மினி பஸ் இயக்க பர்மிட் வழங்கப்படும். இந்நிலையில் மாநகரில் இயங்கும் மினி பஸ்களுக்கான பர்மிட் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதனால் மாநகரில் மினி பஸ்கள் நேற்று இயங்கவில்லை.
இதுகுறித்து மினி பஸ் உரிமையாளர் கூறியதாவது: நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் நாளை (இன்று), பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள், பொதுமக்கள் சென்று வர மினி பஸ்கள் இயங்காது. இதனால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவர். வழக்கமாக பர்மிட் முடிவுக்கு வரும் போதே புதிய பர்மிட் வழங்க வேண்டும். கடந்த, 14ல் பர்மிட் முடிந்தது. நாளை (இன்று) மதியம் பர்மிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே நாளை (இன்று) மினி பஸ்களை இயக்குவது சற்று சிரமம் தான். அதேசமயம் நகர் பகுதியில் அதிக துாரம் மினி பஸ்களை இயக்கும் வகையில் அனுமதி வழங்க அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.