Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து 2 ஆடுகள் பலி; 5 ஆடுகள் காயத்தால் பீதி

டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து 2 ஆடுகள் பலி; 5 ஆடுகள் காயத்தால் பீதி

டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து 2 ஆடுகள் பலி; 5 ஆடுகள் காயத்தால் பீதி

டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து 2 ஆடுகள் பலி; 5 ஆடுகள் காயத்தால் பீதி

ADDED : ஜூன் 16, 2025 03:20 AM


Google News
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே ஒரே இரவில் மூன்று இடங்களில், ஆடுகளை கடித்து சிறுத்தை வெறியாட்டம் போட்டுள்ளது. இதில் இரு ஆடுகள் இறந்து விட்டன. ஐந்து ஆடுகள் படுகாயம் அடைந்தன.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம், வினோபா நகர், இழுபாறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தன். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு, ௧௦க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த, ௧௩ம் தேதி நள்ளிரவில் தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகள், பயங்கரமாக அலறின. இதைக்கேட்ட கந்தன் வெளியே வந்து பார்த்தபோது, ஆடுகளை ஒரு சிறுத்தை கடித்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தன் சத்தமிட்டதால், சிறுத்தை வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டது. ஆடுகள் கட்டியிருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகள் இறந்த நிலையிலும், மூன்று ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தது.

தகவலறிந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் விரைந்தனர். உயிருக்கு போராடிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்த பிறகு, இறந்த ஆடுகளின் உடல்கள் உடற்கூறு பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன், வினோபா நகரில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டையும், இழுபாறை தோட்டம் பகுதியை சேர்ந்த வேங்கையனுக்கு சொந்தமான ஒரு ஆட்டையும் சிறுத்தை கடித்து படுகாயம் அடைந்தது வனத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

இரண்டு மாதங்களாக குண்டேரிப்பள்ளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. மனிதர்களை கடித்து கொல்லும் முன்பு, சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us