/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/27 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு27 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு
27 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு
27 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு
27 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
ஈரோடு : அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட குழு நிர்வாகிகள் கூட்டம், ஈரோட்டில் நடந்தது.
சாவித்திரி தலைமையில், அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, ராஷூ, ராமதாஸ், சசி தங்கப்பன், ரமேஷ் பேசினர்.ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட கால, நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் சிரமப்படுகிறது. வரும், 27 முதல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன், காலவரையற்ற மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாதாந்திர உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை மறுக்க கூடாதென தீர்மானம் நிறைவேற்றினர்.