/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/௧௫௦ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை ௧௫௦ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
௧௫௦ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
௧௫௦ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
௧௫௦ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
ஈரோடு : பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், ௧50 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.பக்ரீத் பண்டிகையையொட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில், நேற்று ஏராளமான இஸ்லாமியர் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதே போன்று ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரயில்வே காலனி பள்ளிவாசல், வளையகார வீதி பள்ளிவாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பாளையம், எல்லப்பாளையம், கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோட்டம், விவிசிஆர், திண்டல், ஆர்என்புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வாசல்களில் தொழுகை நடந்தது.இதேபோல் மாவட்டத்தில் கோபி, சத்தி, அந்தியூர், பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி என, 150க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடந்த தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.