/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காலை சிற்றுண்டி திட்டம்; சத்துணவு ஊழியர் ஆவல்காலை சிற்றுண்டி திட்டம்; சத்துணவு ஊழியர் ஆவல்
காலை சிற்றுண்டி திட்டம்; சத்துணவு ஊழியர் ஆவல்
காலை சிற்றுண்டி திட்டம்; சத்துணவு ஊழியர் ஆவல்
காலை சிற்றுண்டி திட்டம்; சத்துணவு ஊழியர் ஆவல்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
பவானிசாகர் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், பவானிசாகர் வட்டார கிளை சார்பில், ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது. தலைவர் சரிதா தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். ஓய்வு வயதை, 60ல் இருந்து, 62 ஆக உயர்த்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ஐந்து லட்சம் ரூபாய், சமையலர் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.