அறிவியல் பூங்காவை பார்வையிட ஆர்வம்
அறிவியல் பூங்காவை பார்வையிட ஆர்வம்
அறிவியல் பூங்காவை பார்வையிட ஆர்வம்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகில், 1.75 ஏக்கர் பரப்பளவில், 10 கோடி ரூபாய் மதிப்பில் அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மாதிரி ராக்கெட், ராக்கெட் ஏவுதளம், டைனோசர், யானை சிலைகள், பல்வேறு தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இப்பூங்காவில், அறிவியல் சம்பந்தமான அம்சங்கள் இடம் பெறுள்ளன. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நுாற்றுக்க்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பள்ளிகள் தொடர் விடுமுறையால், கடந்த மூன்று நாட்களாக பூங்காவில் கூட்டம் அலைமோதியது.நியூட்டனின் வண்ணத்தட்டு, சூரிய மண்டலம், செயற்கைகோள், ஆற்றல் கடத்தும் வழிகள், கியர்களின் வகை, அலை இயக்கம் குறித்து, பூங்காவில் அமைந்திருக்கும் தியேட்டரில், காட்சி படமாக திரையிடப்பட்டது. சிறுவர்கள், மக்கள் வியந்து பார்த்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 2,000க்கும் மேற்பட்டோர், பூங்காவை பார்வையிட்டதாக, பூங்கா பராமரிப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.