ADDED : செப் 21, 2025 01:23 AM
* கோபி அருகே மொடச்சூரில் பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 110 ரூபாய், குண்டு உளுந்து மற்றும் பச்சை பயிர், தலா 120 ரூபாய், பாசிப்பருப்பு, 130, தட்டைபயிர், 110, கொள்ளு, 70, கடுகு, 100, சீரகம், 300, மல்லி, 120, மிளகு, 820, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 110, வரமிளகாய், 160, பூண்டு, 120 முதல், 200 ரூபாய்க்கும், புளி, 160 முதல், 240 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 3,000 ரூபாய் முதல், 3,045 ரூபாய்; இரண்டாம் தரம் (மீடியம்), 2,850 ரூபாய் முதல், 2,925 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 1,197 மூட்டைகளும், 35 லட்சம் ரூபாய்க்கு விற்றது. அதேபோல் உருண்டை வெல்லம், 30 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய் விலையில் அனைத்து மூட்டைகளும், 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 35.50 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.
* ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில், 30 கிலோ எடை கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,350 - 1,460 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 - 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 350 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 - 1,430 ரூபாய்க்கு விலை போனது.
கடந்த வாரத்தைவிட உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்ந்தது. நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் விலையில் மாற்றமில்லை.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, ௪,671 மூட்டைகளில், ௨.௦௮ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 210.15 ரூபாய் முதல் 233.18 ரூபாய்; இரண்டாம் தரம், 2௬ ரூபாய் முதல் 228.22 ரூபாய் வரை, ௪.௫௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-400, காக்கடா-225, செண்டு மல்லி-60, கோழி கொண்டை-50, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்-300, சம்பங்கி-80, அரளி-140, துளசி-50, செவ்வந்தி-120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 16,745 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ பச்சை தேங்காய், 54.30 - 67.39 ரூபாய், கசங்கல் தேங்காய், 64.79 - 73.39 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 6,979 கிலோ தேங்காய், 4.௬௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 13 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 700 ரூபாய், தேன்வாழை, 620, பூவன், 510, ரஸ்த்தாளி, 540, மொந்தன், 230, ரொபாஸ்டா, 160, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,460 வாழைத்தார்களும், 8.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 22 ரூபாய் முதல் 45 ரூபாய்
வரை விற்றது.