ADDED : செப் 21, 2025 01:23 AM
தாராபுரம் :தாராபுரம் அருகே வேளாண்மைத்துறை சார்பில், அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பேசினர்.
கண்காட்சியில் வேளாண்மை துறை, இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி போன்ற பல்வேறு அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.