ADDED : செப் 15, 2025 01:57 AM
ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 58 ரூபாய்க்கும், நேந்திரன், 22 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 710, தேன்வாழை, 560, பூவன், 500, ரஸ்த்தாளி, 610, மொந்தன், 300, ரொபஸ்டா, 260, பச்சைநாடான், 420 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,220 வாழைத்தார்களும், 7.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 44 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 19 ஆயிரத்து 130 தேங்காய்களும், 6.22 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் புதுப்பாளையம் விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், ௨,௦௨௦ வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 120-700 ரூபாய், தேன் வாழை தார் 60-480; பூவன் தார், 140-560; ரஸ்தாளி தார் 350-800; மொந்தன் தார், 120-350; ஜி-9 தார் 50-150; பச்சைநாடன் தார், 250-450 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 35-58 ரூபாய்; நேந்திரன் கிலோ 12-20 ரூபாய்க்கும் விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,040 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-260, காக்கடா-225, செண்டுமல்லி-11, கோழி கொண்டை-70, ஜாதி முல்லை-500, கனகாம்பரம்-500, சம்பங்கி-30, அரளி-40, துளசி-50, செவ்வந்தி-100 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. இதில் ஜெர்சி இன மாடுகள், 2,500 ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மலை மாடுகள், 4,௦௦௦ ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய்; நாட்டு மாடுகள், 4,௦௦௦ ரூபாய் முதல் 57 ஆயிரம் ரூபாய்; எருமை, 3,௦௦௦ ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய் வரை, 4,௦௦௦க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.