மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா
மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா
மன்னர் சந்திரமதி சிலை திறப்பு விழா
ADDED : செப் 15, 2025 01:56 AM
ஈரோடு:ஈரோட்டில், 17ம் நுாற்றாண்டில் கோட்டை கட்டி ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாருக்கு, செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில், சிலை வடிவமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாநில துணை தலைவருமான நந்த
கோபால், மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரான அவினாசி ஆதீனம் திருப்புக்
கொளியூர் வாகீசர் மடாலயத்தின் காமாட்சி தாச சுவாமிகள், சந்திரமதி முதலியாரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இதையடுத்து கரிகால் சோழன் சிலையை, முதலியார் கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் அருண்குமார் பாலுசாமி, கைக்கோளப்படை சிலையை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோரும் திறந்து வைத்தனர். விழாவில் செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் சந்திரமதிக்கு, முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.