/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தல்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தல்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தல்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2025 01:43 AM
ஈரோடு, அந்தியூர் தாலுகா, சந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா, துணைத் தலைவர் லதா உள்ளிட்ட நிர்வாகிகள், பெற்றோர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
சந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, 60 மாணவர்கள் படிக்கின்றனர். 3 தார்சு கட்டடங்கள், ஒரு ஓட்டு கட்டடம் உள்ளன. பள்ளிக்கு, 20 அடி துாரத்தில் பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் மழை நீர் பள்ளி வளாகத்தில், 3 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கும். பள்ளியின் நான்கு புறமும் வீதிகள் செல்கின்றன.
அதில் எந்நேரமும் போக்குவரத்து வாகனங்கள் செல்வதால், ஆபத்தாகவும், இடையூறாகவும் உள்ளது. மது குடிப்போர், பள்ளி வராண்டாவில் பாட்டில்களையும், பிற பொருட்களையும் வீசி செல்கின்றனர். மாணவர்களுக்கு பாதிகாப்பற்ற நிலை தொடர்கிறது. எனவே இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி, பள்ளிக்குள் மழை நீர், பிற தண்ணீர் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.