/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காங்கேயத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம்காங்கேயத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம்
காங்கேயத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம்
காங்கேயத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம்
காங்கேயத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
காங்கேயம் : காங்கேயத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி), வரும், 20ம் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.
காங்கேயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கும் ஜமாபந்தி முகாமில், காங்கேயம் வட்ட மக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை, தங்கள் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் கொடுத்து தீர்வு பெறலாம். இத்தகவலை தாசில்தார் மயில்சாமி தெரிவித்துள்ளார்.ஜமாபந்தி நடக்கும் நாள்களும், கோரிக்கை மனு பெறப்படும் கிராமங்கள் விபரம்: ஜூன் ௨௦: காங்கேயம் உள்வட்டம் கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கேயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர்.ஜூன் 21: ஊதியூர் உள்வட்டம் ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூர், முதலிபாளையம்.ஜூன் 25: நத்தக்காடையூர் உள்வட்டம் மறவபாளையம், கீரனுார், பாப்பினி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை.ஜூன் 26: வெள்ளகோவில் உள்வட்டம் முத்துார், சின்ன முத்துார், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல்.