/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு இடத்தை ஆக்கிரமித்த தனி நபர் ; பஞ்.,ல் குடிநீர் வினியோகம் முடக்கம்அரசு இடத்தை ஆக்கிரமித்த தனி நபர் ; பஞ்.,ல் குடிநீர் வினியோகம் முடக்கம்
அரசு இடத்தை ஆக்கிரமித்த தனி நபர் ; பஞ்.,ல் குடிநீர் வினியோகம் முடக்கம்
அரசு இடத்தை ஆக்கிரமித்த தனி நபர் ; பஞ்.,ல் குடிநீர் வினியோகம் முடக்கம்
அரசு இடத்தை ஆக்கிரமித்த தனி நபர் ; பஞ்.,ல் குடிநீர் வினியோகம் முடக்கம்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே சங்கராப்பாளையம் பஞ்., குருநாதபுரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சுமைதாங்கி பகுதியில் நடக்கும் பாலம் கட்டுமான பணியால், சங்கராப்பாளையத்திலிருந்து குருநாதபுரத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து குடிநீர் குழாயை இணைக்கும் பணியில் பஞ்., நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. அப்போது குழாய் பதிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை, தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தது தெரிந்தது. இதனால் குழாயை இணைக்க முடியாமல் குடிநீர் வினியோகம் பாதித்தது.சில நாட்களுக்கு முன், முறையான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, குருநாதபுரத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற பஞ்., தலைவர் குருசாமி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கம்பி வேலியை அகற்றினால் தான், குழாயை இணைத்து குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதனால் ஆக்கிரமித்த ஆசாமியிடம், ந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தாசில்தார் கவியரசு, பஞ்., தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றாததால், குடிநீர் வினியோகம் முடங்கியுள்ளது.