ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
காங்கேயம் : ஈரோடு மாவட்டம் கோபி பணிமனையை சேர்ந்த புறநகர அரசு பஸ் (டி.என்.௩௩-என்-3207), திருச்சியில் இருந்து கோவைக்கு நேற்று மாலை சென்றது.
காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானாவில் சிக்னலை மதிக்காமல் சென்றதால், பின்னால் வந்த கார் மோதியது. இதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.