/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஐசிஎஸ்ஈ., ஐஎஸ்சி., பள்ளி கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன் ஐசிஎஸ்ஈ., ஐஎஸ்சி., பள்ளி கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன்
ஐசிஎஸ்ஈ., ஐஎஸ்சி., பள்ளி கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன்
ஐசிஎஸ்ஈ., ஐஎஸ்சி., பள்ளி கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன்
ஐசிஎஸ்ஈ., ஐஎஸ்சி., பள்ளி கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன்
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
ெபருந்துறை: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அளவிலான ஐசிஎஸ்ஈ., மற்றும் ஐஎஸ்சி., பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, ஈங்கூர், தி யுனிக் அகெடமி பள்ளி சார்பில், 8 வது ஆண்டாக நடந்தது.மொத்தம், 17 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் சென்னை புனித மைக்கேல்ஸ் அகெடமி பள்ளி மற்றும் சென்னை பரிம்ரோஸ் பள்ளி விளையாடியதில், புனித மைக்கேல்ஸ் அகெடமி பள்ளி வெற்றி பெற்றது. கோவை மாவட்டம், காரமடை விவித சர்வதேச பள்ளி முதல்வரும், தனியார் பள்ளி மேலாண்மை சங்க செயற்குழு உறுப்பினருமான கவிதா நந்தகுமார் பரிசு வழங்கினார். ஆட்ட நாயகனாக ஆனந்த் சுதிர் ரவீந்திரன் (சென்னை புனித மைக்கேல்ஸ் அகெடமி பள்ளி), சிறந்த பந்து வீச்சாளராக ருகேஷ் கண்ணன் (வேலுார் பகவான் மஹாவீர் தியான்நிகேதன் ஜெயன் பள்ளி), சிறந்த மட்டை வீரராக சாய்லட்சுமித் (கரூர் ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா பள்ளி) மற்றும் வளர்ந்து வரும் வீரராக க்ரிஷ் சுரேந்தர் (சென்னை வேல்ஸ் இன்-டர்நேஷனல் பள்ளி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ஈங்கூர் தி யுனிக் அகெடமி பள்ளி சேர்மேன் இளங்கோராமசாமி தலைமை வகித்தார். பள்ளி மாணவன் பவின் பரனேஷ் வர-வேற்றார். மோகனப்ரியா நன்றி கூறினார். ஈங்கூர் தி யுனிக் அகெடமி பள்ளி நிர்-வாக இயக்குனர்கள் அஸ்வின் இளங்கோ, லட்சுமி ப்ரியா அஸ்வின், பள்ளி தாளாளர் உமையவள்ளி இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.