/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் அரசு பள்ளிகள் நாளை திறப்பு எதிரொலி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் அரசு பள்ளிகள் நாளை திறப்பு எதிரொலி
பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் அரசு பள்ளிகள் நாளை திறப்பு எதிரொலி
பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் அரசு பள்ளிகள் நாளை திறப்பு எதிரொலி
பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் அரசு பள்ளிகள் நாளை திறப்பு எதிரொலி
ADDED : ஜூன் 01, 2025 01:41 AM
ஈரோடு, கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கு நாளை அரசுப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் நேற்று காலை முதலே, வெளியூர்களில் இருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிக்கு வந்தவர்கள், குடும்பத்துடன் ஊருக்கு செல்வதும், வெளியூர் சென்றவர்கள் ஈரோடு திரும்புவதுமாக உள்ளனர். இதனால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கூடியது. குறிப்பாக ஈரோடு வரும் மற்றும் ஈரோட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் ரயிலில் கூட்டம் காணப்படுகிறது.
அதேபோல பள்ளி திறப்புக்காக பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு சாலை, ஆர்.கே.வி.சாலை, காந்திஜி சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை மற்றும் கடை வீதிகளில் யூனிபார்ம், பிற ஆடைகள், பேக், லஞ்ச் பேக், ஷூ, சாக்ஸ், ஸ்டேஷனரிகள் வாங்க திரண்ட பெற்றோர்கள், மாணவர்களாலும், கடைகளில் விற்பனை களை கட்டியது.