/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி-சத்தி சாலையில் முறையாக மூடாத குழிகளால் விபத்து அபாயம் கோபி-சத்தி சாலையில் முறையாக மூடாத குழிகளால் விபத்து அபாயம்
கோபி-சத்தி சாலையில் முறையாக மூடாத குழிகளால் விபத்து அபாயம்
கோபி-சத்தி சாலையில் முறையாக மூடாத குழிகளால் விபத்து அபாயம்
கோபி-சத்தி சாலையில் முறையாக மூடாத குழிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 01, 2025 01:41 AM
கோபி, கோபி-சத்தி சாலையில் மின்சார கேபிள் பதிக்க, மூன்று இடங்களில் தோண்டிய குழியை சீராக மூடாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே குள்ளம்பாளையம் பிரிவை கடந்து, கரட்டூர் அருகேயுள்ள கோபியை வரவேற்கும் நுழைவு வாயிலுக்கு முன்னும், பின்னும், பிரதான சாலையின் குறுக்கே இரு இடங்களில் சாலையில் குழி தோண்டி மூடினர்.
இதேபோல் சீதா கல்யாண மண்டபம் அருகே, பிரதான சத்தி சாலையின் குறுக்கே, குழி தோண்டி மூடப்பட்டது. இந்த குழிகளை முறையாக மூடாததால், சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.