/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம் பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்
பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்
பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்
பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்
ADDED : ஜூன் 01, 2025 01:26 AM
ஈரோடு, உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, பிரம்மா குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாடகம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது. டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், புகையிலை ஒழிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
டாக்டர்கள் சாந்தி, வேலவன் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினர். 'போதை ராஜா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. பின் வாகனத்தில் எல்.இ.டி., திரையில் புகையிலை ஒழிப்பு காட்சிகளை ஒளிபரப்பினர்.
இதேபோல் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்.பார்க் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிரம்ம குமாரிகள் ரவி, ஏற்பாடுகளை செய்திருந்தார்.