ADDED : டிச 02, 2025 02:32 AM
ஈரோடு, ஈரோட்டில் மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து, துறை வாரியாக ஆய்வு செய்து, நடந்து வரும் திட்டப்பணிகளின் நிலைகளை கேட்டறிந்தார்.
மலை கிராமங்களுக்கு சாலைகள் அமைப்பது, தெரு விளக்கு வசதி செய்தல், சாலை விரிவாக்கம், அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த கழிவு நீக்கம் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை வலைதளத்தின் மூலம் கழிவு செய்வது பற்றி எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


