ADDED : டிச 02, 2025 02:32 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வரும், 6ம் தேதி காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


