ADDED : டிச 02, 2025 02:32 AM
ஈரோடு, கார்த்திகை மாத திங்கட்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார ருத்ர யாகம் நேற்று நடந்தது. இதில் சிவாச்சாரியர்கள், 108 மூலிகைகளை பயன்படுத்தி வேத மந்திரங்களுடன் யாகங்களை நடத்தினர். முன்னதாக உற்சவருக்கு
பல்வேறு அபிஷேகம் நடந்தது. உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, கல்வி மற்றும் கேள்வி ஞானத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க இந்த யாகம் நடத்தப்பட்டதாக சிவாச்சாரியர் தெரிவித்தனர்.


