ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
ஈரோடு : தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு செய்தனர்.
மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வித்யாதேவி, பொருளாளர் தவ்லத் முன்னிலை வகித்தனர்.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை, வருவாய் துறையிடம் ஒப்படைத்து, கிராம சுகாதார செவிலியர் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்ப நலப்பணிகளை மட்டும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். சுகாதார ஆய்வாளர் உட்பட செவிலியர் பணிக்கு இணையான பணிகளில், 5 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. செவிலியர் பணியில், 29 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரே பதவி உயர்வு வழங்குவதால், பெரும்பாலானவர்களுக்கு ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் போகிறது. எனவே கிரேடு-2, 1 ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.