மா.திறனாளிகளுக்கு 2வது நாளாக முகாம்
மா.திறனாளிகளுக்கு 2வது நாளாக முகாம்
மா.திறனாளிகளுக்கு 2வது நாளாக முகாம்
ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
ஈரோடு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான, பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம், 58 பேர் பஸ் பாஸ் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து பரிந்துரைத்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) வசந்தராம்குமார், அரசு போக்குவரத்து அதிகாரி ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.