/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரத்த காயங்களுடன் சிறுமி: போலீசார் விசாரணை ரத்த காயங்களுடன் சிறுமி: போலீசார் விசாரணை
ரத்த காயங்களுடன் சிறுமி: போலீசார் விசாரணை
ரத்த காயங்களுடன் சிறுமி: போலீசார் விசாரணை
ரத்த காயங்களுடன் சிறுமி: போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 20, 2024 06:30 AM
ஈரோடு : ஈரோட்டில், ரத்த காயங்களுடன் வீட்டில் இருந்து வெளியே சிறுமி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு, வீரப்பன்சத்திரம் பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் தமிழ் செல்வி.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். இவரது இரண்டாவது கணவர் நவீன் குமார், கூலி தொழிலாளி. இருவரும் ஆறு ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கின்றனர். தமிழ் செல்வியின் முதல் கணவருக்கு, 9 வயதில் மகள் உள்ளார். இரண்டாவது கணவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் அனைவரும் பழநி கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று, 9 வயது சிறுமி வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கீழே போட்டு உடைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நவீன் குமார், சிறுமியை அடித்துள்ளார். இதில் தலை, முகம், கைகளில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அடி தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நவீன் குமார், அவரது மனைவி, சிறுமியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, தனக்கு மயக்கம் வருவது போல் இருப்பதாக நவீன் குமார் கூறியதால், அவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.