/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைதுவருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது
வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது
வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது
வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது
ADDED : ஜூன் 20, 2024 06:30 AM
காங்கேயம் : காங்கேயத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, பைனான்ஸியரிடம் பணம் பறிக்க முயன்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் என்.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சந்துரு, 32.
இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணி என்பவர் கடனாக பணம் பெற்றார். பணத்தை திருப்பி கொடுக்காத காரணத்தால், சந்துரு தனது நண்பர்களான சுபாஸ், மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, மணியை திருப்பூருக்கு அழைத்து வந்து பணத்தை பெற்று கொண்டார். இந்நிலையில் கடந்த, 15ம் தேதி சந்துரு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.இரு கார்களில் வந்த ஐந்து பேர், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டு வருமானம், அடையாள ஆவணங்கள் குறித்து கேட்டனர். உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தீர்களா என்று சந்துரு கேட்டார். அதற்கு, போலீசாரிடம் செல்ல வேண்டாம், பணத்தை கொடுத்தால், புகாரை முடித்து விடுகிறோம் என்று தெரிவித்தனர். சந்தேகமடைந்த சந்துரு, போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். அவரை தடுத்த கும்பல் பணத்தை தரவில்லையென்றால், கொன்று விடுவோம் என்று மிரட்டினர். பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் சந்துரு வீட்டுக்கு வருவதை பார்த்த கும்பல், காரில் ஏறி தப்பியது.அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்றது தொடர்பாக, நான்கு பேரை நேற்று ஊதியூர் போலீசார் கைது செய்தனர். அதில், சந்துருவின் நண்பர்களான சுபாஷ், 32, மகேந்திரன், 31, போலீஸ் கார்த்தி, 38, ஆகியோர், சந்துருவிடம் பணம் பறிக்கம் திட்டமிட்டு, ராமதாஸ், நவீன் பிரசாத், மாதேஸ்வரன், கணேஷ், நந்தா ஆகியோரை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க அனுப்பியது தெரிந்தது. இதுதொடர்பாக, சுபாஷ், மகேந்திரன், நவீன் பிரசாத், மாதேஸ்வரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்