Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ADDED : ஜூன் 20, 2024 06:30 AM


Google News
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் வனப்பகுதியில், பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகம், சுஜில்குட்டை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, ஓரிடத்தில் யானை இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் (பொ) சுதாகர், பவானிசாகர் ரேஞ்சர் சிவக்குமார், வன உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் வந்து ஆய்வு செய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் யானையின் உடலை உடற்கூராய்வு செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய, உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யானையின் உடல் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us