/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நகைக்கடனுக்கான விதிமுறைகளை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல் நகைக்கடனுக்கான விதிமுறைகளை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல்
நகைக்கடனுக்கான விதிமுறைகளை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல்
நகைக்கடனுக்கான விதிமுறைகளை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல்
நகைக்கடனுக்கான விதிமுறைகளை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 01:58 AM
ஈரோடு கடந்த, இரு தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவிப்பில், வங்கிகள் மூலம் நகைக்கடன் பெறும்போது, 'அந்த நகை தனக்கானது என்பதை உறுதி செய்யவும், இந்நகை வாங்கியதற்கான ஆவணங்கள்' தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கிக்கு, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் முதல் சாதாரண மக்கள் வரை, கந்து வட்டியில் இருந்து வங்கிகளும், அதில் உள்ள நகைக்கடன், பயிர் கடனே காப்பாற்றி வருகிறது.
இச்சூழலில் ரிசர்வ் வங்கி, 9 கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது, விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக, நகைக்கடன் வாங்கும் வாடிக்கையாளர், அடமானம் வைக்கும் நகை தனக்குத்தான் சொந்தம் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. அத்தியாவசிய தேவைக்கு, நகையை அடமானம் வைத்து எளிதில் கடன் பெறலாம் என்ற சாமானியனின் நம்பிக்கையை இது தடுத்துள்ளது. இந்த விதியால் உரிய நேரத்தில் கடன் கிடைக்காமல், விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் விவசாய பணி, அத்தியாவசிய பணி, கல்வி நிறுவனங்களில் சேர்ப்பு போன்றவை நிகழாமல் போகும். எனவே, இவற்றை தளர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.