/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தி காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல் சத்தி காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல்
சத்தி காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல்
சத்தி காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல்
சத்தி காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல்
ADDED : மே 22, 2025 01:58 AM
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கல்வியியல் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடைபெற்றது.
சத்தியமங்கலம் சாரு பள்ளி, எஸ்.ஆர்.டி பள்ளி, சௌந்தரம் வித்யாலயா, செயிண்ட் ஜோசப் பள்ளி, புளியம்பட்டி மகரிஷி பள்ளி, கருவலுார் ஹயக்ரீவர் பள்ளி, செல்லாண்டியம்மன் பள்ளி, நாமக்கல் சந்திரா செல்லப்பன் பள்ளி, கே.என். பாளையம் பாரதி பள்ளி, கோபி ஸ்ரீ வித்யாலயா, நம்பியூர் குமுதா பள்ளி, காங்கேயம் வித்யா நிகேதன் பள்ளி, குருமந்துார் குமாரசாமி கவுண்டர் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்தனர்.
இதில் காமதேனு கல்வியியல் கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு பி.எட். மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தங்களுக்கான பணி உறுதி ஆணையை பெற்றுக் கொண்டனர். இந்த வளாக நேர்காணலை கல்லுாரியின் இணை செயலாளர் மலர் செல்வி துவக்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ராம்பிரபு வரவேற்றார். கல்லுாரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் கமல வேணி நன்றி தெரிவித்தார்.