/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன் அரிசி கடத்தல்: 1,350 கிலோ பறிமுதல்ரேஷன் அரிசி கடத்தல்: 1,350 கிலோ பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்தல்: 1,350 கிலோ பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்தல்: 1,350 கிலோ பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்தல்: 1,350 கிலோ பறிமுதல்
ADDED : மே 22, 2025 01:57 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற வாகனத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம், பொள்ளாச்சி சாலையில், நேற்று குடிமைப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணங்கள் இன்றி, 1,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. இதையடுத்து, சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை கடத்தியதாக தளவாய்பட்டினத்தை சேர்ந்த தங்கராஜ், 39, என்பவர் மீது, அதிகாரிகள் புகார் பதிவு செய்து, அவரிடமிருந்த அரிசி, கடத்த பயன்படுத்திய வாகனத்தை, பறிமுதல் செய்தனர்.