Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எல்லீஸ்பேட்டை - பாசூர் 4 வழிச்சாலை திட்டப்பணி; முதல்வர் துவக்கி வைக்க 'பேட்டியா' வலியுறுத்தல்

எல்லீஸ்பேட்டை - பாசூர் 4 வழிச்சாலை திட்டப்பணி; முதல்வர் துவக்கி வைக்க 'பேட்டியா' வலியுறுத்தல்

எல்லீஸ்பேட்டை - பாசூர் 4 வழிச்சாலை திட்டப்பணி; முதல்வர் துவக்கி வைக்க 'பேட்டியா' வலியுறுத்தல்

எல்லீஸ்பேட்டை - பாசூர் 4 வழிச்சாலை திட்டப்பணி; முதல்வர் துவக்கி வைக்க 'பேட்டியா' வலியுறுத்தல்

ADDED : ஜூன் 07, 2024 12:10 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம், தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.

சோலார் யூ.பி.எஸ்., பேட்டரீஸ் டிரேடர்ஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ரவிசந்திரன், அறிக்கை படித்தார். ஈரோடு மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் பேசினார்.ஈரோட்டில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, சத்தியமங்கலம் - கோவை போன்ற நகரில் இருந்து வரும் கனரக வாகனங்கள், எல்லீஸ்பேட்டை, மூலக்கரையில் இருந்து பூந்துறை சாலை, எழுமாத்துார் சாலை, பாசூர் சாலை இணைத்து, புதிய, 4 வழிச்சாலை அமைக்க எங்கள் கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் அளவீடு பணியை துவக்க அனுமதியளித்துள்ளார். இப்பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.பி.எஸ்.பார்க் அருகே இயங்கும் வணிக வரித்துறை அலுவலகம், புதிதாக கட்டப்பட்ட இடத்துக்கு மாற்றுவதை வரவேற்கிறோம். அதேநேரம், திண்டல் வட்டார அலுவலகம் அதிக கணக்குகள் கொண்டுள்ளதால், அதனை புதிய கட்டடத்துக்கு மாற்றாமல், பி.எஸ்.பார்க் பழைய கட்டடத்தில் தொடர வேண்டும். ஈரோட்டில் அனைத்து வசதியுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டும். ஈரோடு பழைய கனி மார்க்கெட் இருந்து இடத்தின் அருகே முன்பு போல, பஸ் நிறுத்தம் தொடர வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us