/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு பள்ளி மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்அரசு பள்ளி மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
அரசு பள்ளி மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
அரசு பள்ளி மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
அரசு பள்ளி மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
காங்கேயம்: அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு அமைத்து, பள்ளியின் அன்றாட செயல்பாடுகளை, பெற்றோர்கள் கண்காணிக்க கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் சிறப்பாக இயங்குவதில்லை. இதை தவிர்க்கும் வகையில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், மக்களிடம் கல்வி உரிமை குறித்தான விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, தமிழகம் முழுவதும் ஊர் தோறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துகிறது. இதன்படி காங்கேயம், பாளையகோட்டை கிராமம், வெங்கரையாம்பாளையத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி பங்கேற்றார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்த, மக்களுக்கும், அரசுக்கும் உள்ள பொறுப்பு, கடமைகளை எடுத்து கூறினார்.