/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே தி.மு.க., சாதனை; இ.பி.எஸ்., காட்டம் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே தி.மு.க., சாதனை; இ.பி.எஸ்., காட்டம்
ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே தி.மு.க., சாதனை; இ.பி.எஸ்., காட்டம்
ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே தி.மு.க., சாதனை; இ.பி.எஸ்., காட்டம்
ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே தி.மு.க., சாதனை; இ.பி.எஸ்., காட்டம்
ADDED : செப் 12, 2025 02:07 AM
காங்கேயம், 'மக்களை காப்ேபாம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ள, அதிமுக பொது செயலர் இபிஎஸ், காங்கேயத்தில் நேற்றிரவு பேசினார். அவர் பேசியதாவது:
தி.மு.க.,வின் ஆட்சி காலத்தில் இதுவரை, ௫ லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்தான் வாங்கப்பட்டுள்ளது. எந்த நல்ல திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். அதிக பால் கிடைக்கும் வகையில், காங்கேயம் கலப்பின மாடு உருவாக்கப்பட்டு, விவசாசயிகளுக்கு வழங்கப்படும். அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி உயர்வு என அனைத்தும் உயர்த்தப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதி எதையும் திமுக நிறைவேற்றவில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மக்களை நம்பாத ஸ்டாலின்
முன்னதாக தாராபுரத்தில் நடந்த பிரசாரத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது:
இன்றைக்கு தமிழகத்தில் ஸ்டாலின், உங்களை நம்பவில்லை, கூட்டணியை நம்புகிறார். மக்கள் தான் எஜமானர்கள். எனவே, அ.தி.மு.க., மக்களை நம்புகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து, 52 மாதங்களாகிறது. தாராபுரத்துக்கு ஏதாவது நல்ல திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? தி.மு.க., கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி.
உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டம் மூலம், மக்களின் 46 பிரச்சனைகளை சரி செய்வதாக ஸ்டாலின் சொல்கிறார். அத்தனை பிரச்னைகளையும், ஏழு மாதத்தில் மனு வாங்கி தீர்க்க முடியுமா என்ன? இப்படித்தான் கடந்த தேர்தலின் போது பெட்டி ஒன்றை கொண்டு வந்து, பெட்ஷீட் விரித்து அமர்ந்து ஊர், ஊருக்கு மக்களிடம் குறை கேட்டு, ஆசையை துாண்டினார். சினிமாவில் வருவது போல, ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், ஆசையை துாண்ட வேண்டும் அப்படித்தான் நாடகமாடினார்கள். இவ்வாறு பேசினார்.