/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 13, 2025 01:24 AM
ஈரோடு, வரும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்ய, தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம்.
இ-சேவை மையத்தில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின்
புல வரைபடம், கிரய பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதார், ரேஷன் கார்டு), சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 0070 60 103AA-22799 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணம், 600 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை வரும், அக்.,10 வரை இணைத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டு, தற்காலிக உரிமம் அல்லது நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையும் மனுதாரரின் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.