/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தி அருகே சிக்கிய பழமையான பொருட்கள் சத்தி அருகே சிக்கிய பழமையான பொருட்கள்
சத்தி அருகே சிக்கிய பழமையான பொருட்கள்
சத்தி அருகே சிக்கிய பழமையான பொருட்கள்
சத்தி அருகே சிக்கிய பழமையான பொருட்கள்
ADDED : செப் 12, 2025 02:06 AM
ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த, 250 ஆண்டு பழமையான வீரன் நினைவுக்கல், வட்டக்கல், எழுத்துகளுடன் கூடிய தண்ணீர் தொட்டி மற்றும் 13 கற்கள், ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி கூறியதாவது: தொப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் புருஷோத், எட்டாம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக், கருப்புசாமி, துர்கா, ஒன்பதாம் வகுப்பு பிரித்விராஜ், ஹரிணி, ஜனனி ஆகியோர், இந்த பொருட்கள் இருப்பதாக, பள்ளி ஆசிரியர் ராஜ்கமல் மூலம் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று ஆய்வு செய்து இந்த பொருட்கள் மீட்கப்பட்டன. இவற்றை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.