/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 5 டன் பிளாஸ்டிக் கவர் ஈரோட்டில் பறிமுதல் 5 டன் பிளாஸ்டிக் கவர் ஈரோட்டில் பறிமுதல்
5 டன் பிளாஸ்டிக் கவர் ஈரோட்டில் பறிமுதல்
5 டன் பிளாஸ்டிக் கவர் ஈரோட்டில் பறிமுதல்
5 டன் பிளாஸ்டிக் கவர் ஈரோட்டில் பறிமுதல்
ADDED : செப் 12, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க, கமிஷனர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
சூளையில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் சேர்ந்து, மாநகராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரித்து விற்பது தெரிந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: சூளை அருகில் அருள்வேலவன் நகரில், கோபால் என்பவருக்கு சொந்தமான, மஹாவீர் பாலி பேக்ஸ் பிளாஸ்டிக் ரோல் தயாரிப்பு குடோன் செயல்படுகிறது. இவருக்கு சூளை டாஸ்மாக் சந்தில் மற்றொரு குடோனும் உள்ளது. இந்த குடோனுக்கு பிளாஸ்டிக் ரோல்களை கொண்டு வந்து, பிளாஸ்டிக் கவர்களாக தயாரித்து விற்றுள்ளனர். ஆய்வில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த, 5 டன் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.