/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கனவு இல்லம் திட்டத்துக்கு பணியிடம் கோரி ஆர்ப்பாட்டம்கனவு இல்லம் திட்டத்துக்கு பணியிடம் கோரி ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்டத்துக்கு பணியிடம் கோரி ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்டத்துக்கு பணியிடம் கோரி ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்டத்துக்கு பணியிடம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:07 AM
ஈரோடு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு உரிய பணியிடங்களை வழங்க கோரி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும், 2,000 முதல், 4,000 வீடுகள் வரை ஒதுக்கப்பட்டு, உரிய பயனாளிகள் தேர்வு செய்து வழங்கும் பணி நடக்கிறது. தவிர ஏற்கனவே உள்ள வீடுகளை பழுது நீக்கம் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்துக்கு உரிய பணியிடங்கள் வழங்க வேண்டும். பயனாளிகள் தேர்வு சார்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிட வேண்டும். இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
வட்டார தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் ரவிசந்திரன், வட்டார செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர். மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன் அலுவலகங்களிலும் இதேபோல் கோரிக்கையை வலியுறுத்தி உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.