/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கடம்பூர் மலையில் கிடைத்த புலிக்குத்தி கல்கடம்பூர் மலையில் கிடைத்த புலிக்குத்தி கல்
கடம்பூர் மலையில் கிடைத்த புலிக்குத்தி கல்
கடம்பூர் மலையில் கிடைத்த புலிக்குத்தி கல்
கடம்பூர் மலையில் கிடைத்த புலிக்குத்தி கல்
ADDED : ஜூன் 28, 2024 01:06 AM
சத்தியமங்கலம். கடம்பூர் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த புலிக்குத்திப்பட்டான் கல் கிடைத்தது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கானக்குந்துாரில் பெருங்கற்காலத்தை சேர்ந்த புலிக்குத்திப்பட்டான் கல்லை, சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் ரவின்குமார் கண்களில்
தென்பட்டது.
கானக்குந்துார் பஸ் நிறுத்தம் அருகில் பெருமாள் கோவில் எதிரில் சாலையோர முட்புதரில் இந்த கல் இருந்தது. இது, 114 செ.மீ., உயரம், 92 செ.மீ., அகலம் கொண்டுள்ளது. இந்த கல்லை சுற்றி, 750 செ.மீ., சுற்றளவில் கற்கள் அரணாக வைக்கப்பட்டிருந்தது.
தன்னை தாக்க பாய்ந்து வரும் புலியை, வலது கையிலுள்ள நீண்ட ஈட்டியால் கழுத்து பகுதியில் குத்த, மறுமுனை கழுத்தின் பின் பகுதியில் வெளி வந்துள்ளது.
இடது கை புலியை தடுத்தவாறு உள்ளது. அந்த வீரன் இடுப்பில் அரையாடையுன் கை, கால்களில் வீரக்கழல், காதில் குண்டலம் அணிந்துள்ளான். அதற்கு மேலே நந்தி படுத்துள்ளது. அதை வீரனின் உருவம் வணங்குவது போல் உள்ளது. வீரனின் தலைக்கு மேல் சிவலிங்கமும் வடிக்கப்
பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியரும், கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளருமான ராஜேந்திரன் கூறியதாவது:
இந்த புலிக்குத்தி கல், கால்நடைகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரன் நினைவாக, வீரத்தின் அடையாளமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருங்கற்காலத்தை சேர்ந்தக் கல்வட்டத்துக்கு நடுவில் அமைந்துள்ளது. பதுக்கை கற்களும் அந்த இடத்தில் இருந்துள்ளது.
இதுபோன்ற நடுகல் வேறெங்கும் இதுவரை தென்பட்டதில்லை. வீரன் சிவலோகப்பிராப்தம் அடைந்து அமர்ந்த நிலையில் சிவலிங்கத்தை வழிபடுகிறான். அருகில் நந்தி பொறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடுகல்லில் எந்த செய்தியும் இடம்பெற
வில்லை.
இவ்வாறு கூறினார்.