ADDED : ஜூலை 03, 2024 02:58 AM
தாராபுரம்:அமராவதி அணையை துார்வார வலியுறுத்தி, தாராபுரத்தில் பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் தலைமையில், பழைய மற்றும்
புதிய ஆயக்கட்டு விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நீண்ட
காலமாக துார்வாரப்படாததால், அமராவதி அணையில், 40 சதவீதம் வண்டல்
மண் தேங்கி, நீர் சேகரிப்பின் அளவு குறைந்து ஆயக்கட்டு பாசன நிலங்கள்
பயன்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய விளைநிலங்களில்
ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அமராவதி அணையை முழுமையாக துார் வாரி, விவசாயிகளுக்கு உதவ
வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.