/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விதிமீறி குவாரிக்கு அனுமதி முருகன் கோவில் முன் நாளை உண்ணாவிரதம்விதிமீறி குவாரிக்கு அனுமதி முருகன் கோவில் முன் நாளை உண்ணாவிரதம்
விதிமீறி குவாரிக்கு அனுமதி முருகன் கோவில் முன் நாளை உண்ணாவிரதம்
விதிமீறி குவாரிக்கு அனுமதி முருகன் கோவில் முன் நாளை உண்ணாவிரதம்
விதிமீறி குவாரிக்கு அனுமதி முருகன் கோவில் முன் நாளை உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 03, 2024 02:57 AM
ஈரோடு:அரசு விதிகளை மீறி, குவாரிக்கு அனுமதி அளித்த கனிம வளத்துறையை கண்டித்து, நாளை உண்ணாவிரதம் நடக்கும் என, ஈரோடு எஸ்.பி.யிடம் நேற்று மனு கொடுத்தனர்.
குண்டேரிபள்ளம் பாசன சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமையிலான விவசாயிகள், எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோபி தாலுகா கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் கிராமத்தில், அறநிலைய துறைக்கு சொந்தமான கொங்கனகிரி முருகன், மாதேஸ்வரன் கோவில்களுக்கான நிலம் உள்ளது. இதில் மாதேஸ்வரன் கோவில் நிலத்தை கல் குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
கோவிலுக்கும், குவாரிக்கும், 30 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது. கொங்கனகிரி முருகன் கோவிலுக்கும், குவாரிக்கும், 100 மீட்டர் இடைவெளி மட்டும் உள்ளது. அரசு சமுதாய கூடம், மின் வாரிய அலுவலகம் குவாரி அருகே உள்ளது.
அரசு விதிமுறைப்படி குவாரிக்கும், பிற அரசு அலுவலகங்களுக்குமான இடைவெளி இல்லை. இதை கவனத்தில் கொள்ளாமல் கனிம வளத்துறையிர்
அனுமதி தந்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் துறை, கனிம வளம், பொதுப்பணி, அறநிலையத்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை என அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து கொங்கனகிரி முருகன் கோவில் முன் நாளை காலை உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் மக்கள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்க உள்ளனர்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர வேண்டும். அனுமதி அளிக்காவிட்டாலும் உண்ணாவிரதம் நடக்கும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.