அரசு ஊழியர் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:58 AM
நம்பியூர்:பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்,
நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம்
நடந்ததுய வட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க
நிர்வாகிகள் ராமலிங்கம், ரகமத்துல்லா முன்னிலை வகித்தனர். வருவாய்
துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் ரகு விளக்க உரையாற்றினார். பழைய
பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க வட்ட செயலாளர் கருப்புசாமி, வருவாய் துறை ஊழியர் சங்க
நிர்வாகி ராஜா உள்பட, 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து
கொண்டனர்.
* தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தாளவாடி கிளை சார்பில்,
வட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், தாளவாடி தாலுகா அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் நடந்தது.