Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குருமந்துார் பஞ்., எலத்துார் டவுன் பஞ்., மீது வாய்க்கால் கரையில் குப்பை கொட்டுவதாக புகார்

குருமந்துார் பஞ்., எலத்துார் டவுன் பஞ்., மீது வாய்க்கால் கரையில் குப்பை கொட்டுவதாக புகார்

குருமந்துார் பஞ்., எலத்துார் டவுன் பஞ்., மீது வாய்க்கால் கரையில் குப்பை கொட்டுவதாக புகார்

குருமந்துார் பஞ்., எலத்துார் டவுன் பஞ்., மீது வாய்க்கால் கரையில் குப்பை கொட்டுவதாக புகார்

ADDED : செப் 21, 2025 01:03 AM


Google News
ஈரோடு :கீழ்பவானி வாய்க்கால் கரைகளில், உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் குப்பை கொட்டுவதால், நீர் நிலை மாசுபட்டு, கரை பலவீனமாவதாக, நீர் வளத்துறை கோபி பாசனப்பிரிவு எண்-2 உதவி பொறியாளர் தினேஷ்குமார், கடத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது: நம்பியூர் தாலுகா குருமந்துார் பஞ்.,ல் சேகரிக்கப்படும் குப்பை, கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரங்களில் கொட்டுகின்றனர்.

வாய்க்கால் கரை, தண்ணீர் மாசுபடுகிறது. கரைகளில் ஆய்வு செய்ய இடையூறாக உள்ளது. இதுகுறித்து பஞ்., நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் அனுப்பியும் தொடர்ந்து கொட்டி வருகிறது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல் எலத்துார் டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு, புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் எலத்துார், செட்டிபாளையம் கிராம பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையில் டவுன் பஞ்., குப்பைகளை கொட்டுவதால் நீர் நிலை மாசுபடுகிறது. கரையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால், நீர் வளத்துறை புகார் கடிதம் அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us