டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி
டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி
டிராக்டர் சக்கரம் ஏறி சிறுவன் பலி
ADDED : செப் 21, 2025 01:03 AM
அந்தியூர் :மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அமோல், தனது குடும்பத்தினருடன் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் செங்குட்டை தோட்டத்தில் தங்கி, கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனர்.
சமாதன் பஜரங் கரும்பு லோடு ஏற்ற டிராக்டரை தோட்டத்தில் இருந்து எடுத்து வந்தார். அவர் அருகில் அமோலின் மூத்த மகன் அத்துல், 14, அமர்ந்திருந்தார்.
செங்குட்டை தோட்டம் அருகே ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்த அத்துல் தலை மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.