/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு
பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு
பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு
பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின திட்டம் 1 ரூபாயில் பயன் பெற அழைப்பு
ADDED : செப் 04, 2025 01:53 AM
ஈரோடு, ஈரோடு பி.எஸ்.என்.,எல்., பொது மேலாளர் சிவ் ஷங்கர் சச்சன் வெளியிட்ட செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:
பி.எஸ்.என்.எல்., சார்பில் சுதந்திர தின திட்டம் ஆக., 1ல் அறிமுகம் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல்.,ன் '4ஜி' சேவை ஒரு மாதத்துக்கு, இலவசமாக சோதித்து பார்க்கவும், வரையறுக்கப்பட்ட காலத்துக்கு, 1 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. உள் நாட்டில் உருவாக்கப்பட்ட '4ஜி'யை அளிக்கிறது.
வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்பு, தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, தினமும், 100 எஸ்.எம்.எஸ்., - ஒரு சிம் இலவசமாக கிடைக்கும். இச்சலுகையை வரும், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம்.
'மேக் இன் இந்தியா' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, நாடு முழுவதும், ஒரு லட்சம் '4ஜி' தளங்களை நிறுவி வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.