ADDED : செப் 04, 2025 01:53 AM
ஈரோடு, பவானி தாலுகா, சேர்வராயன்பாளையம், அத்தாணி சாலையில் சாயப்பட்டறையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி, அனுமதி இன்றி செயல்படும் சாய, சலவை பட்டறைகள், சட்டத்துக்கு புறம்பாக சாயப்பணிகள் மேற்கொள்வதையும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் சாக்கடை கால்வாயில் வெளியேற்றுவதையும் கண்டறிந்தார்.
அவரது அறிக்கைப்படி, கலெக்டர் கந்தசாமி உத்தரவுபடி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அங்கிருந்த இரு தொழிற்சாலைகளின் சாய, சலவை தொட்டிகளை இடித்து அகற்றி, நடவடிக்கை மேற்கொண்டனர். சாய, சலவை தொழிற்சாலைகள் பூஜ்ய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல், ஆலைகளை இயக்கக்கூடாது. கழிவுநீரை வெளியேற்றக்கூடாது. மீறி வெளியேற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.