/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியல்ல' த.வெ.க., மீது பா.ஜ., நிர்வாகி சாடல் 'மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியல்ல' த.வெ.க., மீது பா.ஜ., நிர்வாகி சாடல்
'மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியல்ல' த.வெ.க., மீது பா.ஜ., நிர்வாகி சாடல்
'மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியல்ல' த.வெ.க., மீது பா.ஜ., நிர்வாகி சாடல்
'மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியல்ல' த.வெ.க., மீது பா.ஜ., நிர்வாகி சாடல்
ADDED : ஜூன் 13, 2025 01:31 AM
ஈரோடு, பிரதமர் மோடி தலைமையிலான, 11 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ., அலுவலகத்தில், தலைவர் செந்தில் நேற்று தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., என்பது முஸ்லீம், கிறிஸ்தவ மத அமைப்பு, அது சார்ந்த கட்சிகள், சில ஜாதி கட்சி கூட்டணியை வைத்து கொண்டு மத சார்பற்ற கூட்டணி என்கின்றனர். அடிக்கும் கொள்ளை, முறைகேடுகளில் கூட்டு கொடுத்து, கூட்டணி கட்சிகளை தி.மு.க., தக்க வைத்துள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், நீட் எதிர்ப்பு, பாசிசம், இந்த ஆட்சியின் அவலம் போன்றவைகளில் அரசியல் தெளிவு இல்லாமல் உள்ளார். நடிகர் என்ற அடிப்படையில் பிரிக்கும் ஓட்டுக்கள், தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளும். தேர்தலுக்கான கட்சியாக மட்டுமே த.வெ.க., இருக்கும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியாக இருக்காது.
ஒரே நாடு; ஒரே தேர்தல், தேசிய கல்வி கொள்கை, அனைவருக்கும் அனைத்தும் என்பது போன்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு செயல்படுகிறது.
இவ்வாறு கூறினார். நிர்வாகிகள் பழனிசாமி, குரு குணசேகரன், கிருஷ்ணவேணி, நிரஞ்சனா சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.